Tuesday, September 20, 2011

INTJ VIRKU PARATU EMAILGAL

பாராட்டி வந்த மெயில் கள் !
 
      அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்..... தன்னை ஒரு சீர்திர்த்த சமூக நல வாதி என்று  மக்கள் மன்றத்தில் காட்டி கொண்டு 


உண்ணாவிரதம் என்ற பேரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டு இருக்கும் இந்த மோடி என்கிற கேடியை எதிர்த்தும்,
இந்த கேடிக்கு சப்பைகேட்டும் பாசிச சிந்தனை வாதி ஜெயலலிதாவைவும்  எதிர்த்து இன்று தாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மிகவும் கால சிறந்தது. காரணம் இஸ்லாமியர்கள் 2002 கலவரத்தையும் நம் சகோதர கண்மணிகளையும்    நம்  சகோதரிகளையும் கருவருத்ததை
பல வருடம் ஆனாலும் மறக்க மாட்டார்கள், பேருக்கு கூலிக்கு சில இஸ்லாமியர்களை ஆள் பிடித்து எனக்கும்
இஸ்லாமியர்கள் ஆதரவு உண்டு என்று மோடி காட்டுவது மிக மிக கேலிக்குரியது.... அதை விட கேவலம் தான் அடுத்த பிரதமர் என்ற கனவு.இவையெல்லாம் அடித்து நொறுக்கும் விதமாக நம் எதிர்ப்புகளை நாம் காட்ட வேண்டும். ஒரு மல்லிகா என்ற பெண் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டு உள்ளார். எங்கே நம் இஸ்லாமிய இயக்கங்கள் இருந்தும் ஒருவரும் ஆர்பாட்டம் செய்ய வில்லையே என்று நான் கவலை பட்டேன்... ஆனால் அல்ஹம்து லில்லாஹ். இந்திய தௌஹீது ஜமாத் இன்று (19 -09 -11 )ஆர்பாட்டம் செய்ததை பார்த்து ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன். ADMK உடன் கூட்டணி வைத்தால் என்ன? அல்லது ஆதரவு கொடுத்தால் என்ன? நாம் நம் எதிர்ப்பை உடனே மற்ற இயக்கங்கள் காட்ட வேண்டாமா? ஒரு இயக்கம் தனக்கு பிடிக்க வில்லை என்றால் உடனே அவனை எதிர்த்து ஆர்பாட்டம், சிடி களை வெளியிடும் நாம் இந்த காரியத்திற்கு ஏன் உடன் களம் இறங்க வில்லை...? இது தான் ஷைத்தான் வேலை. ஆனால் நம் முதல்வரை பார்தீர்களா? உடனே தன் பாசிச சிந்தனையை காட்டும் விதமாக 2 அமைச்சர்களை குஜராத் அனுப்பி உள்ளார் என்றால் நம் இயக்க சகோதர்கள் சிந்திக்க வேண்டும்... கூட்டத்தை காட்டவேண்டும் எனவே ஒரு 3 அல்லது நாலு நாள் ஆகட்டும் என்று ஆர்ப்பாட்டத்தை தள்ளிபோடாமல் உடனே இறங்கி ஆர்பாட்டம் செய்து தங்கள் எதிர்ப்பை காட்டியதை பாராட்டாமல் இருக்க முடியாது... அல்லாஹ் இந்த ஜமாத்திற்கு இன்னும் பேரருள் புரியட்டும் என்று நான் பிரார்த்தனை செய்கின்றேன்....     இப்னு குல்சூம்... நெல்லை ஏர்வாடி


இந்த நாட்டிலே எந்த அயோக்கியனும்கொலைகாரனும்ரௌடிகளும் தலைவராகமுதல்வராகபிரதமராக வரலாம் 
என்றால் சட்டம் எதற்குநீதிமன்றம் எதற்குசிறைச்சாலைகள் எதற்கு2002 லே 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை 
கொன்றுஅவர்கள் கற்புகளை சூறையாடிபல உயிர்களை கொளுத்தி தன பாசிச வெறியை தனித்து கொண்டவன். இந்த மோடி என்கிற கேடி. இவர்தான் இதற்க்கு தலைமை தாங்கி எங்களை செய்ய சொன்னார் என்று தங்கள் வாயாலே 
எனவே இந்த விஷயத்தில் அனைவரும் நம் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் ...  அபூ முஜாஹித். குவைத்.
இந்த பாவிகள் ஒத்துக்கொண்ட நிகழ்வுகளை  தேஹல்கா டாட் காம் பட்டவர்தனமாக வெளிப்படுத்தியது. அப்படி இருந்தும்,சமூக நல்லிணக்கத்துக்கு வேட்டு வைத்து விட்டு, நான் நல்லிணக்க வாதி என்று சொன்னால் மக்கள் மறக்க மாட்டார்கள்... எதையும் ஏற்று கொள்ளவும் மாட்டார்கள். இப்போது ஒரு பேஷனாக உண்ணாவிரதம் இருந்தால் அடுத்த பிரதமர் நம்ம தான் என்று கனவு காணும் மோடியே அது ஒருகாலமும் பலிக்காது. இஸ்லாமிய மக்கள் அவ்வளவு சீக்கிரமாக எதையும் மறக்கவில்லை. இவ்வளவு இருக்க நம் முதல் அமைச்சர் இங்கிருந்து 2 அமைச்சர்களை மோடிக்கு ஆதரவாக குஜராத் அனுப்பி உள்ளார் என்றால் தன் நிலையை மறுபருசீலனை செய்ய வேண்டும். இந்த காரியம் ஏற்று கொள்ள முடியாது  என்பதால் அணைத்து இஸ்லாமிய இயக்கமும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். அதற்கு முத்தாய்ப்பாக இன்று காலை இதை எதிர்த்து இந்திய தௌஹீது ஜமாஅத் ஆர்ப்பாட்டம் செய்து கைது செய்யப்பட்டு உள்ளார்கள். அல்ஹம்து லில்லாஹ். இதை   எந்த யோசனையும் இல்லாமல் உடனே களம் இறங்கிய இந்திய தௌஹீது ஜமாஅத் தை  நான் உளமார பாராட்டுகின்றேன். -abu  mujaahidh

No comments:

Post a Comment