Tuesday, September 20, 2011

ARASU ADIGAREGALIN ALAICHYA POKU

ரேஷன் கார்டுக்காக பார்வையற்றவர் 14 வருட தவம்


ராமநாதபுரம் ஏர்வாடி அருகே வெள்ளையன் வலசையைச் சேர்ந்த பார்வையற்ற அப்துல்கனி விண்ணப்பித்து 14 ஆண்டுகளாகியும் ரேஷன் கார்டு கிடைக்காமல் தவித்து வருகிறார்.
அப்துல்கனி பிறவியிலேயே பார்வை இழந்தவர். மனைவி அமீனாபீவி, நான்கு மகன்கள் உள்ளனர். பார்வையில்லாததால் வேலை கிடைக்கவில்லை. மனைவி சில வீடுகளில் வேலை பார்த்து வருகிறார். 

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து இதுவரை கிடைக்கவில்லை.

கலெக்டர் அருண்ராயிடம் மனு கொடுத்த இவர் , ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போதெல்லாம், வீட்டு வரி ரசீது இருந்தால்தான் தருவோம் என்று கூறுகின்றனர். 

வாடகை வீட்டில் வசிக்கும் நான் வீட்டு வரி ரசீதுக்கு எங்கு போவேன். மனைவி, மகனின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வருகிறோம்.
 இலவச அரிசிக்காகவாவது ரேஷன் கார்டு தேவைப்படுகிறது. இதுவும் கிடைக்காமல் சில நேரங்களில் பசியை போக்குவது கூட சிரமமாக உள்ளது. ரேஷன்கார்டு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறினார்.

No comments:

Post a Comment